நேரம்

Saturday, November 18, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 5

ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி க்ருஸ்மஸ் கொண்டாட்டங்கள்
வழக்கம்போல 30 நிமிஷம் லேட்டா ஆரம்பிச்சு பல நல்ல நிகழ்ச்சிகளைத் தந்தாங்க, முக்கியமா குழந்தைங்க கலக்கராங்க, என்ன talent! என்ன ஒரு involvement! amazing performance!! இவங்களை எல்லாம் சேர்த்து ஒரு நாடகம், சின்னதா ஒரு சொற்பொழிவு (தமிழ்ல இல்லைனா ஆங்கிலத்தில) தரச் சொல்லலாம் அது குழந்தைகளுக்கு ரொம்ப encouraging-ஆ இருக்கும். அங்கிதா, அவினாஷ் ரெண்டுபேரும் நல்லா MC பண்ணினாங்க. கௌதம் audio control பார்த்துகிட்டான். ஆக இது முழுக்க முழுக்க youngsters பண்ணின Program, நான் முன்னாடி சொன்ன மாதிரி சும்மா ஏதோ செய்யனுமேன்னு செய்யாம ஒரு ஈடுபாட்டோட செய்யராங்க இதை யாரும் notice பண்ணினாங்களான்னு தெரியல.
இந்த முறையின் முதல் சங்கு: இனி நடக்க இருக்கும் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் குழந்தைகளோட item இல்லைன்னாதான் பெரியவங்களுக்கு நேரம் ஒதுக்கனும்ன்னு ஒரு ரூல் போடச்சொல்லி புதிய தமிழ் சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள் விடறேன்.
இரண்டாவது சங்கு: Audio system சரியாவே இல்லை. வசீகரா பாடினவங்க குரல் எடுக்கவே இல்லை, எல்லோரும் கௌதம் இருந்த பக்கம் பார்த்து கல்யாணத்துல கெட்டிமேளம் கொட்ட மேளக்காரரை மிரட்ற மாதிரி அவனை மிரட்ட ஆரம்பிக்க, யாரோ அங்க போயி ப்ரச்சனை audio system-லன்னு கண்டுபிச்சாங்க.
மூன்றாவது சங்கு: பட்டிமன்றத்து மேடைல monitor ஒர்க் பண்ணலை, அதனால அதையும் கொஞ்சம் சரி பார்க்கனும்.

பட்டிமன்றம்:
எதிர்பார்த்த விருவிருப்பு இல்லை. ரெண்டு அணியும் பேசவும், சண்டைபோடவும் நிறைய scope இருந்தும் அதை யூஸ் பண்ணிக்காம விட்டுட்டாங்க. இதெல்லாம் பரவாயில்லை, நடுவருக்கு ரெண்டு அணியும் பேசினது காதுல விழாம பாவம் அவர் கடைசி வரை கலக்கமாவே இருந்தார். நான் முன்னாடி சொன்ன மாதிரி முடிஞ்சவரை காமெடியா தலைப்பு கொடுத்துட்டா எல்லாரும் நல்லா ரசிச்சிருப்பாங்க இப்படி குழப்படியா கொடுத்தா கஷ்டம்தான். இருந்தும் புவனா ரொம்ப நல்லா பேசினாங்க, அழகா அழுத்தம் திருத்தமா தன்னுடைய பக்க நியாயத்தை தெளிவா பேசினாங்க. ரவி தன்னை திடீர்னு சேர்த்ததுக்கு வருத்தப்பட்டாரா, சந்தோஷப்பட்டாரான்னு தெரியலை, prepare பண்ண டைம் இருந்திருந்தா நல்லா பேசியிருப்பார்ன்னு நினைக்கிறேன். முரளி ஏன் கத்தி பேசினார்ன்னு யோசிச்சேன் அப்பரம்தான் தெரிஞ்சுது மேடையில monitor வொர்க் பண்ணலை அதனால அவர் கத்தி பேசினார்ன்னு. கீழ இருந்த எங்களுக்கு அவர் சண்டை போட்ட மாதிரி இருந்தது.

புதுக் குழு
சங்கத்தின் புது குழு பதவி ஏற்று விட்டது. முந்தைய தலைவர் தன்னுடைய மன வருத்தங்களை கொட்டித் தீர்த்து விட்டார். நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், நடப்பவை நல்லதாக இருக்கட்டும். புதிய குழுவை வரவேற்போம்.
நம்ம ப்ளாக்
அஜாத சத்ரு கொஞ்சம் வில்லங்கமான ஆள் போல, ஆரம்பிக்கும் போதே, குத்தலோடு ஆரம்பித்து இருக்கார், 'உஜாரையா உஜாரு, ப்ளாகிகளே உஜாரு'.

எதிரொலி என்னப்பா ஆச்சு, நாகு நீங்க பீனிக்ஸ்-ல இருக்கரதா சொல்றாரு, நீங்க மெட்ராசுன்னு சொல்றீங்க, அதெல்லாம் இருக்கட்டும், அப்பரம் என்ன ஒன்னும் எழுதக் காணோம். என்னை சீண்டிவிட்டு வேடிக்கை வேற பார்த்தீங்க. இப்ப உங்களுக்கு என்ன 'writer's block'ஆ.

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.