நேரம்

Friday, May 13, 2011

பித்தனின் கிறுக்கல்கள் – 40

தமிழகத்தில் தேர்தல்
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கிறது என்று நேற்றே இந்தப் பதிவை வெளியிட முயற்சித்தேன், சோதனையாக (யாருக்கு?) blogger.com வேலை செய்யாமல் கழுத்தறுக்க, தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு வெளியிடுகிறேன். . இந்தப் பதிவு வெளிவரும் சமயம் முடிவுகள் வர ஆரம்பித்திருக்கும் அதற்கு முன்பாக பதிந்து விடவேண்டும் என்று எழுதியதால் பல கருத்துக்களை இதில் பதிவு செய்ய முடியவில்லை. அடுத்தப் பதிவில் அவற்றைப் பற்றி விலாவாரியாக கிறுக்கி விடுகிறேன்.

நான் அதிகம் எதிர்பார்த்த ஒரு தேர்தல் என்றால் தமிழகத்தின் இந்தத் தேர்தலைச் சொல்லலாம்.


ஒரு
லட்சத்து எழுபதாயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக கணிக்கப் பட்டு தமிழக ஆளும் கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் கைதுக்குப் பிறகு நடந்த தேர்தல்.


தி
.மு.க தலைமையின் மகள், மனைவி இருவருக்கும் அந்த ஊழலில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நேரத்தில் நடந்த தேர்தல்.


இஸ்ரோ
ஊழல், கார்கில் வீரர்களுக்கான குடியிருப்பில் ஊழல், விஜிலன்ஸ் கமிஷனரின் நியமனத்தில் ஊழல் என்று எங்கு திரும்பினாலும் ஊழலில் மட்டுமே திளைத்திருக்கும் மத்திய அரசு ஆளும் அதே நேரத்தில் நடக்கும் தேர்தல்.


.தி.மு.க வும் தே.மு.தி.க வும் கை கோர்த்து களம் காணும் முதல் தேர்தல்.
சுமாராக ஒரு தொகுதிக்கு 30-50 கோடி வரை இறைத்து சந்திக்கப் பட்ட தேர்தல்.


தி
.மு.கவின் குடும்ப அரசியல் கூவம் நாற்றத்தையும் மீறி நாறிய பிறகு வந்த தேர்தல்.


தமிழகத்தை
ஒரு கிழவனாரின் குடும்பம் கூறு போட்டு கட்டைப் பஞ்சாயத்து செலுத்துவதை கண் கூடாக கண்ட பிறகு வந்த தேர்தல்.


தேர்தல்
கமிஷன் முன்பு இருந்ததை விட மிக மிக கண்டிப்பாக கண்காணித்த தேர்தல்.


மின்சாரம்
எப்போதாவது வரும் ஒரு அபூர்வ சஞ்சீவனி என்ற நிலைக்கு தமிழகத்தை தி.மு.க. கட்சி கொண்டு சென்ற பிறகு வந்திருக்கும் தேர்தல்.


தமிழகம்
என்பது கிழவனாரின் ஒரு திரைப்படத்தில் சொல்லப் பட்டது போல கொடியவர்களின் கூடாரமான பிறகு வந்திருக்கும் தேர்தல்.


.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதலில் மதுரையை அழகிரியிடமிருந்து மீட்பேன் என்று ஜெ. சூளுரைத்திருக்கும் தேர்தல்.


அவர்
அவருடையை நகைகளை கோர்ட்டிலிருந்து முதலில் மீட்கட்டும் என்று கிழவனார் எள்ளி நகையாடிய தேர்தல்.


எத்தனை
ஊழல்களை செய்தாலும் அதிலெல்லாம் தான் அறிவியல் பூர்வமாக தப்பிக்கும் வல்லமை படைத்தவன் என்பதை கிழவனார் மீண்டும் மீண்டும் நிரூபித்து லவ கிலேசமும் வெட்கப்படாமல் தலித் என்றும் பூணூல் என்றும் சொல்லி சொல்லியே மக்களை ஏமாற்றும் நிலையை பலரும் புரிந்து கொள்ள ஆரம்பித்த நேரத்தில் வந்த தேர்தல்.


ஜெயலலிதா
ஊழல் இல்லாத பேர்வழியில்லை என்றாலும் அவருடைய சமீபத்திய ஆட்சி மிகச் சிறப்பாக இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அரசு அலுவலர்களிடம் காட்டிய கண்டிப்பாக இருக்கட்டும், மழை நீர் சேகரிப்பாக இருக்கட்டும், வீராணம் திட்டம் என்று பல விஷயங்களில் ஒரு தெளிவான அணுகுமுறை அவரிடம் இருந்த்து. இதையெல்லாம் சொல்லியும், கிழவனாரின் கையாலாகத்தனத்தையும் சொல்லி அவர் சூறாவளிப் பயணம் செய்த தேர்தல்.


தன்
மீது எந்தக் களங்கத்தையும் எவரும் (கைப்புள்ள வடிவேலு உட்பட பலர்) சொன்ன போதும் தனது கவனத்தை சிதறாது கிழவனாரையும் அவருடைய அடிப் பொடிகளையும் கேள்விகளாலேயே திணறடித்து மக்களை கவர்ந்த விஜயகாந்த் நம்பிக்கையோடு எதிர் பார்க்கும் தேர்தல்.


அருமையான
பேச்சாளர் வைகோ வின் அனல் பறக்கும் பேச்சைக் கேட்க முடியாது போன தேர்தல்.


எமது
கருத்து என்று சொன்னால், அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும், அது இப்போது நடந்திருக்கிறது. சாதாரண வெற்றியென்று இல்லை, வரலாறு காணாத வெற்றி. 160ல் போட்டியிட்டு 147ல் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது (91.87%), திமுக (21/119 - 17.67%), விஜயகாந்த் (27/45 65.85%), காங்கிரஸ் (5/63 - 7.93%).


அதனால்
16ம் தேதி முதல் தமிழகத்தில் பாலும் தேனும் ஓடப்போவதில்லை, கிழவனாரின் குடும்ப ஆதிக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்க ஒரு வழி கிடைக்கும். ஜெயல்லிதா போன ஆட்சியில் எப்படி தமிழகத்ததை கடனிலிருந்து மீட்டாரோ அதே செயலை மீண்டும் செய்ய வேண்டும். நமது பெரும் குடி மக்கள் அடுத்த முறை மீண்டும் கிழவனார் (அது வரை இருந்தால்) அல்லது அவரது அடிப்பொடிகளில் ஒருவர் என்று யாரையாவது கொண்டுவருவார்கள், மீண்டும் ஜெயலலிதா ‘தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்.... “ போல மீண்டும் ஆட்சிக்கு வந்து ...... ‘அவள் ஒரு தொடர்கதை’ போல ஆட்சி செய்ய வேண்டும். ஹும். இது இந்த ஊர் ரிபப்ளிகன் (ஜெ), டெமாக்ரட் (கருணாநிதி) ஆட்சி போல என்று நீங்களாக கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.


இப்போது
தி.மு.க. எதிர் கட்சியாகக்கூட இல்லாமல் 3வது இடத்தை எட்டியிருக்கிறது. எதிர் கட்சியாக இருந்தாலே தாத்தா சட்ட சபைக்கு வரப் போவதில்லை, இதில் 3வது இடமென்றால், கேட்கவே வேண்டாம். பதவியில் இல்லாததால் இனி 5 வருடங்களுக்கு உளியின் ஓசை, இளைஞன், பொன்னர் சங்கர் என்று டப்பா படங்களுக்கு கதை வசனம் எழுத எந்த இளிச்சவாயன்களும் வரப்போவதில்லை. ரெகார்ட் டான்ஸ் பார்க்க முடியாது, பட்டமளிப்பு விழா கிடையாது, வாலி, வைரமுத்து, பா.விஜ்யின் ஜால்ரா சத்தம் இருக்காது, என்ன பண்ணப் போகிறாரோ என்றும் கவலைப்பட வேண்டியதில்லை, தாத்தாவால் தேர்தலில் மரண அடி வாங்கிய காங்கிரஸும் சும்மா இருக்காமல், 2ஜி வழக்கை சற்று முடுக்கி விட்டால் கனி, தயாளு என்று யாருக்காவது ஜாமீன், வாய்தா என்று கோர்ட் கோர்ட்டாக போய் வந்தால் 5 வருடம் பஞ்சாகப் பறந்து விடாதா?


இந்தப்
பதிவை நேற்று ஒருவருக்கு வெள்ளோட்டமாக அனுப்பி பதிவை வெளியிடட்டுமா என்று கேட்டேன், அதற்கு அவர் “என்ன இலங்கை இனப் படுகொலையைப் பற்றி எதுவும் எழுதாமல் எப்படி இதை வெளியிடுவது” என்று என்னிடம் கேள்வி கேட்டார்”. அவரிடம், இலங்கையைப் பற்றி என்னிடம் கேட்காமல் இருப்பதே நல்லது என்று சொல்லி அவருடைய அந்த முயற்சிக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டேன்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

0 comments: